நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாஸ் தலைவர் பதவியைத் தற்காப்பேன்: ஹாடி அவாங்

கோலாலம்பூர்:

இவ்வாண்டு செம்படம்பர் மாதம் நடைபெறவுள்ள பாஸ் கட்சி தேர்தலில் கட்சியின் தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்வதாகத் தான்ஶ்ரீ அப்துல் ஹாடி அவாங் கூறியுள்ளார்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக தான் வகித்து வரும் தலைவர் பதவியை விட்டுக் கொடுக்கும் எண்ணம் இல்லை என்று மராங் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹாடி அவாங் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

தற்போது தனது உடல்நிலை சீராக இருப்பதாகவும் வாழ்நாள் முழுவதும் கட்சிக்குச் சேவை செய்ய விரும்புவதாகவும் ஹாடி குறிப்பிட்டார். 

சேவையில் இருக்கும் போதே என் உயிர் பிரிய வேண்டும் என்று தனது விருப்பத்தையும் 77 வயதான ஹாடி மஸ்ஜித் ருசிலாவில் துவா சொற்பொழிவு ஆற்றிய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது இதனைத் தெரிவித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset