நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

1963ஆம் ஆண்டு துன் மகாதீரின் கையெழுத்துடன் வழங்கப்பட்ட மருத்துவ சான்றிதழ் வைரலாகியது

பெட்டாலிங் ஜெயா, 
1963ஆம் ஆண்டு அலோர் ஸ்டாரில் இயங்கிய ‘கிளினிக் மஹா’வில், துன் டாக்டர் மகாதீர் முகமட் வழங்கிய கை எழுத்துப் பதிவுடன் கூடிய மருத்துவ சான்றிதழ் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

Threads தளத்தில் malaysia.time.tunnel என்ற கணக்கில் பகிரப்பட்ட இந்தப் படம், துன் மகாதீர் தனது 100வது பிறந்த நாளைக் கொண்டாடிய நாளில் (ஜூலை 10) வெளியாகியது. அதில், 1963 செப்டம்பர் 1 முதல் 5, வரை, Zulkifli bin Hj Ahmad என்ற மாணவருக்காக வழங்கப்பட்ட 5 நாட்கள் விடுப்புச் சான்றிதழ் இடம்பெற்றுள்ளது.

1957ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கிளினிக் மஹா, kedah மாநிலத்தில் முதல் மலாய்காரருக்கு சொந்தமான தனியார் மருத்துவமனையாகும். அந்தச் சான்றிதழின் எழுத்தியல், பதிவின் தரம் மற்றும் சமூக நினைவுகள் ஆகியவை இந்த பதிவை வைரலாக்கியுள்ளன.

பல்வேறு இணையவாசிகள் தங்களது நினைவுகளைப் பகிர்ந்துள்ளனர். சிலர் “துன் இலவசமாக சிகிச்சை வழங்கியுள்ளார்” என கூற, மற்றவர்கள் “62 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு காகிதத்தின் நிலைமையைப் பார்த்து வியந்துள்ளனர்”. மேலும், துன் மகாதீரின் அழகிய கை எழுத்து பலரையும் ஈர்த்துள்ளது.

இந்த வகையில், ஒரு சாதாரண மருத்துவ சான்றிதழும், வரலாற்று கண்ணோட்டத்தில் இப்போது அரியதொரு சான்றாகக் கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset