நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

விமர்சனத் திறன் கொண்ட சமூகத்தை உருவாக்க இலக்கியச் சிந்தனை அவசியம்: ஃபட்லினா சிடேக் 

கோலாலம்பூர்:

விமர்சனத் திறன் கொண்ட சமூகத்தை உருவாக்க இலக்கியச் சிந்தனை அவசியம் என்று கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் கூறினார். 

சமூகத்தின் நாகரிக வளர்ச்சிக்கு உறுதுணையாகச் செயல்படும் இலக்கியப் படைப்புகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார். 

எழுத்தாளர்களின் ஒவ்வொரு படைப்பும் சமுகத்தின் சிந்தனையை வெளிப்படுத்துகிறது.

உயர் சிந்தனை கொண்ட சமூகத்தை உருவக்கும் எழுத்தாளர்களின் பங்கு முக்கியமானது என்றார் அவர். 

அதுமட்டுமல்லாமல், எழுத்தாளர்களின் படைப்புகள் வாசகர்களுக்கு நேரடி தக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதைப் ஃபட்லினா சுட்டிக் காட்டினார். 

இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற இலக்கிய விருதுகள் வழங்கும் விழாவில் பேசியபோது அவர் இவ்வாறு கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset