நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டத்தோஶ்ரீ நஜிப்பிற்கு வீட்டுக்காவல் உத்தரவை மாமன்னர் இணக்கம் வழங்க வேண்டும்: அம்னோ கோரிக்கை 

கோலாலம்பூர்: 

கூடுதல் உத்தரவு ஒன்று இருந்ததை தேசிய சட்டத்துறை தலைவர் ஒப்புக்கொண்ட் நிலையில் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக் அவரின் எஞ்சிய தண்டனை காலத்தை வீட்டிலிருந்து கழிக்க வீட்டுக்காவல் உத்தரவை மாட்சிமை தங்கிய மாமன்னர் பிறப்பிக்க வேண்டும் என்று அம்னோ கேட்டுக்கொள்கிறது. 

கூடுதல் உத்தரவு ஒன்று இருப்பதை சட்டத்துறை தலைவர் உறுதிப்படுத்தியுள்ள நிலையில் அம்னோ இறைவனுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்று அக்கட்சியின் தலைமை செயலாளர் அஷ்ராஃப் வஜ்டி கூறினார். 

இந்நிலையில் கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தின் விதி 42(1)இன் கீழ் மாட்சிமை தங்கிய மாமன்னர், டத்தோஶ்ரீ நஜிப்பிற்கான வீட்டுக்காவல் உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

கடந்த ஓராண்டாக அவரின் தண்டனை குறைப்பு நடவடிக்கைகளில் சுணக்கம் ஏற்பட்ட நிலையில் இந்த நடவடிக்கையை மாமன்னர் உடனடியாக இணக்கம் வழங்க வேண்டும் என்று அம்னோ கேட்டுக்கொள்வதாக அவர் சொன்னார். 

கடந்த ஜூலை 9ஆம் தேதி, கூடுதல் உத்தரவு தொடர்பான ஆவணம் இருந்ததை நாட்டின் சட்டத்துறை தலைவர் அஹ்மத் தெர்ரிருடின் முஹம்மத் சாலே ஒப்புக்கொண்டதைக் கூட்டரசு நீதிமன்றம் தெரிவித்தது.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset