நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கூடுதலாக 10,000 இலவச மோட்டார் சைக்கிள் ஒட்டுநர் உரிமம்: பி40 மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

சிரம்பான்:

பி40 பிரிவைச் சேர்ந்த இடைநிலைப்பள்ளி மாணவர்கள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ள இலவச மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார். 

MyLesen B2 திட்டத்தின் கீழ் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உரிமத்திற்கு கூடுதலாக 10,000 விண்ணப்பங்கள் திறக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இத்திட்டத்திற்கு அதிகமான வரவேற்பு கிட்டியதால் கூடுதல் விண்ணப்பங்கள் திறக்கப்பட்டுள்ளன. 

இவ்வாண்டு வரவு செலவு திட்டத்தில் பி40 பிரிவைச் சேர்ந்த படிவம் 4, 5 பயிலும் 15,000 இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு MyLesen B2 திட்டத்தின் கீழ் இலவச மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உரிமம் வழங்குவதாக அரசு அறிவித்திருந்தது.

இவ்வாண்டின் முதல் 6 மாதத்திற்குள், 14,581 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார். 

தற்போது கூடுதலாக 10,000 விண்ணப்பங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும் இதற்காக போக்குவரத்து அமைச்சகம் 3.5 மில்லியன் நிதி ஒதுக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

இந்த 10000 விண்ணப்பங்களில் 1000 விண்ணப்பங்கள் நெகிரி செம்பிலானைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் என்று அவர் கூறினார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset