நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இயற்கை வளம், சுற்றுச்சூழல் அமைச்சர் பொறுப்பினை ஜொஹாரி கனி வகிப்பார்

பெட்டாலிங் ஜெயா: 

மலேசியாவின் தோட்டத்தொழில், மூலப்பொருட்கள் அமைச்சராக பொறுப்பு வகித்து வரும் ஜொஹாரி கனி, தற்போது கூடுதலாக இயற்கை வளம், சுற்றுச்சூழல் அமைச்சர் பொறுப்பினை வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு நாட்களுக்கு முன் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசாங்க தலைமை செயலாளர் ஷம்சுல் அஸ்ரி அபு பக்கார் கூறினார்.

பிகேஆர் கட்சியைச் சேர்ந்த நிக் நஸ்மி நிக் அஹ்மத் அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகிய நிலையில் அம்னோவைச் சேர்ந்த ஜொஹாரிக்கு இந்த கூடுதல் அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.  

ஜொஹாரி அம்னோவின் உதவி தலைவராகவும் தித்திவங்சா நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset