
செய்திகள் மலேசியா
இந்திய சமுதாயத்திற்கு ஒதுக்கப்படும் முழு ஒதுக்கீட்டை சிலாங்கூர் மாநில அரசு அறிவிக்க வேண்டும்: பூபாலன்
கோலாலம்பூர் -
இந்திய சமுதாயத்திற்கு ஒதுக்கப்படும் முழு ஒதுக்கீட்டை சிலாங்கூர் மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்.
பாங்கி சட்டமன்ற உறுப்பினரின் இந்தியர் பிரிவு சிறப்பு அதிகாரி பூபாலன் பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.
2025ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தின் மொத்த மதிப்பு 3 பில்லியன் ரிங்கிட்டாகும்.
இதில் 1.7 பில்லியன் ரிங்கிட் நிர்வாகத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 1.3 பில்லியன் ரிங்கிட் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டது.
இந்த 1.3 பில்லியன் ரிங்கிட்டில் தான் மக்கள் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும்.
இந்த 1.3 பில்லியன் ரிங்கிட்டில் எவ்வளவு தொகை இந்திய சமுதாயத்திற்கு ஒதுக்கப்படுகிறது என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இந்நிலையில் இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக 14 மில்லியன் ரிங்கிட் செலவிடப்பட்டுள்ளது என சட்டமன்ற கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராயுடு இதனை அறிவித்துள்ளார். இவ்வேளையில் அவருக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆனால் 1.3 பில்லியன் ரிங்கிட்டில் 0.2 சதவீதம் தான் இந்த 14 மில்லியன் ரிங்கிட்டாகும்.
ஆக இந்திய சமுதாயத்திற்காக மாநில அரசு ஒதுக்கும் மொத்த நிதி இதுவா அல்லது இன்னும் உள்ளதா என்பது எங்களுக்கு தெரியவில்லை.
அதன் அடிப்படையில் சிலாங்கூர் மாநில அரசாங்கம் இந்திய சமுதாயத்திற்கு ஒதுக்கும் நிதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்.
ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராயுடு இந்த விவரங்களை வெளியிட வேண்டும்.
காரணம் மத்திய அரசாங்கத்தில் மித்ராவின் கீழ் 100 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கு சமுதாயத்தை ஓரம் கட்டி விடுகின்றனர்.
இதே நிலை சிலாங்கூர் மாநிலத்திலும் நடக்கக் கூடாது என்பது தான் எங்களின் நோக்கமாகும்.
இதன் அடிப்படையில் தான் இக்கேள்வியை நாங்கள் முன்வைக்கிறோம் என்று பூபாலன் கூறினார்.
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 11, 2025, 6:05 pm
அமெரிக்க வரிவிதிப்பு; சீனாவுடனான உறவுகளால் மலேசியா பயனடைய வேண்டும்: துன் மகாதீர்
July 11, 2025, 6:04 pm
துன் மகாதீரின் 100ஆவது பிறந்தநாளை அரசாங்கம் ஏன் அதிகாரப்பூர்வமாக கொண்டாடவில்லை: வான் சைபுல்
July 11, 2025, 5:15 pm
மலேசிய மக்கள் தொகை 2059-ஆம் ஆண்டில் 42 மில்லியனை எட்டலாம்: தேசிய புள்ளியல் துறை
July 11, 2025, 4:19 pm
கணவரை பிரம்பால் அடித்த குற்றத்தை ஒப்புக் கொண்ட விரிவுரையாளருக்கு 150 ரிங்கிட் அபராதம்
July 11, 2025, 4:18 pm
மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த இந்தோனேசிய தம்பதிக்கு 6 மாதம் சிறைத் தண்டனை
July 11, 2025, 4:17 pm
வழக்கறிஞர்களின் பேரணியில் கலந்து கொள்ள மாட்டேன்: துன் மகாதீர்
July 11, 2025, 3:34 pm