
செய்திகள் மலேசியா
நாசி லெமக்கில் கரப்பான் பூச்சி: வாடிக்கையாளர் அதிர்ச்சி
பெட்டாலிங் ஜெயா
ஒரு மலேசிய குடும்பம் காலை உணவாக வாங்கிய நாசி லெமக்கில் கரப்பான் பூச்சி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிலையைப் பற்றிய கேள்விகள் எழுந்துள்ளன.
Threads- இல் @scsyrh என்ற பயனர் தனது தந்தைக்கு நேர்ந்த அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். “என் அப்பா முட்டையை பிளந்தபோதுதான் சோற்றில் ஏதோ வித்தியாசமாக தெரிந்தது. அதை வெளியே இழுத்துப் பார்த்ததும்… ஒரு முழுமையான கரப்பான் பூச்சி இருந்தது,” என அவர் கூறியுள்ளார்.
இத்தகவலுடன் பதிவிடப்பட்ட புகைப்படத்தில், சோற்றின் மேல் இருந்த கரப்பான் பூச்சி தெளிவாகக் காணப்பட்டதால், அது நெட்டிசன்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. பலரும் அதிர்ச்சி மற்றும் வெறுப்பை வெளிப்படுத்தினர், சிலர் நகைச்சுவையுடனும் கருத்துரைத்தனர்.
“சாம்பல் கொஞ்சம் அதிகமா இருந்ததால்தான், கரப்பான் பூச்சின் கண்ணீர் விட்டிருக்கலாம்,” என நகைச்சுவை பார்வையில் ஒருவர் குறிப்பிட்டார்
“நீங்க சைடு டிஷ் கேட்டீங்களா? அதனால்தான் எக்ஸ்ட்ரா வந்திருக்கு போல!” என சிரிப்பு எமோஜிகளுடன் ஒருவர் பதிவிட்டார்
இந்நிகழ்வுக்குப் பிறகு, சம்பந்தப்பட்ட உணவகம் குறித்து தற்போது வரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஆனால், உணவுப் பொட்டலத்தில் சுகாதாரக் குறைபாடுகள் காணப்படும் நிலை தொடரும்போது, நுகர்வோர் சுய பாதுகாப்பை முன்வைத்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது.
சுகாதாரத் துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் வாய்ப்பும் உள்ளதாகக் கூறப்படுகிறது.
தயாளன் சண்முகம்
தொடர்புடைய செய்திகள்
July 11, 2025, 6:05 pm
அமெரிக்க வரிவிதிப்பு; சீனாவுடனான உறவுகளால் மலேசியா பயனடைய வேண்டும்: துன் மகாதீர்
July 11, 2025, 6:04 pm
துன் மகாதீரின் 100ஆவது பிறந்தநாளை அரசாங்கம் ஏன் அதிகாரப்பூர்வமாக கொண்டாடவில்லை: வான் சைபுல்
July 11, 2025, 5:15 pm
மலேசிய மக்கள் தொகை 2059-ஆம் ஆண்டில் 42 மில்லியனை எட்டலாம்: தேசிய புள்ளியல் துறை
July 11, 2025, 4:19 pm
கணவரை பிரம்பால் அடித்த குற்றத்தை ஒப்புக் கொண்ட விரிவுரையாளருக்கு 150 ரிங்கிட் அபராதம்
July 11, 2025, 4:18 pm
மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த இந்தோனேசிய தம்பதிக்கு 6 மாதம் சிறைத் தண்டனை
July 11, 2025, 4:17 pm
வழக்கறிஞர்களின் பேரணியில் கலந்து கொள்ள மாட்டேன்: துன் மகாதீர்
July 11, 2025, 3:34 pm