
செய்திகள் மலேசியா
டிக்டாக் மூலம் RM84,000 கிரிப்டோ மோசடி
தங்காக்
டிக்டாக் மூலம் பழகிய நபரின் வழிகாட்டலில், Aloe SGM என்ற கிரிப்டோ முதலீட்டுத் தளத்தில் முதலீடு செய்த 52 வயது பெண், மொத்தம் RM84,000 இழந்தார்.
பாதிக்கப்பட்ட பெண், மே 29 முதல் ஜூலை 7 வரை, 17 முறைமையில் பணம் ஐந்து “மியுல் கணக்குகளுக்கு” (mule accounts) மாற்றியதாகவும், பின்னர் ஏமாற்றம் உணர்ந்து போலீசில் புகார் செய்ததாக தங்காக் போலீஸ் தலைவர் ரொஸ்லான் முகமட் தாலிப் கூறினார்.
“mule accounts” என்பது – குற்றவாளிகள் தங்களை மறைத்துக் கொள்ள வேறு நபர்களின் பெயரில் பயன்படுத்தும் வங்கிக் கணக்குகள் ஆகும். பணம் நேரடியாக குற்றவாளியிடம் செல்லாமல், இந்தக் கணக்குகள் வழியாக இயக்கப்படுவதால் சுலபமாகக் கண்டுபிடிக்க முடியாது.
இந்த வழக்கு, குற்றச் சட்டம் பிரிவு 420ன் கீழ் விசாரணை செய்யப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் மற்றும் கடுமையான தண்டனை விதிக்கப்படும்.
பொதுமக்கள், விரைவான இலாபம் அளிக்கும் என்கிற சந்தேகத்திற்கிடமான இணைய முதலீடுகளில் ஈடுபடாமல், எந்தவொரு தளத்தையும் முதலீட்டுக்கு முன் சரிபார்க்க வேண்டும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
July 11, 2025, 6:05 pm
அமெரிக்க வரிவிதிப்பு; சீனாவுடனான உறவுகளால் மலேசியா பயனடைய வேண்டும்: துன் மகாதீர்
July 11, 2025, 6:04 pm
துன் மகாதீரின் 100ஆவது பிறந்தநாளை அரசாங்கம் ஏன் அதிகாரப்பூர்வமாக கொண்டாடவில்லை: வான் சைபுல்
July 11, 2025, 5:15 pm
மலேசிய மக்கள் தொகை 2059-ஆம் ஆண்டில் 42 மில்லியனை எட்டலாம்: தேசிய புள்ளியல் துறை
July 11, 2025, 4:19 pm
கணவரை பிரம்பால் அடித்த குற்றத்தை ஒப்புக் கொண்ட விரிவுரையாளருக்கு 150 ரிங்கிட் அபராதம்
July 11, 2025, 4:18 pm
மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த இந்தோனேசிய தம்பதிக்கு 6 மாதம் சிறைத் தண்டனை
July 11, 2025, 4:17 pm
வழக்கறிஞர்களின் பேரணியில் கலந்து கொள்ள மாட்டேன்: துன் மகாதீர்
July 11, 2025, 3:34 pm