நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காணாமல் போன பிரிட்டன் இளைஞரைத் தேடும் பணி தீவிரம்: அரச மலேசியப் போலீஸ்படை 

கோலாலம்பூர்: 

பிரிட்டனைச் சேர்ந்த இளைஞர் காணாமல் போனது தொடர்பாக அரச மலேசியப் போலீஸ்படை விசாரணை மேற்கொண்டு வருவதாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வு துறையின் இடைக்கால இயக்குநர் டத்தோ ஃபாடில் மர்சுஸ் தெரிவித்தார். 

கடந்த 7-ஆம் தேதி மலேசியாவிற்கு வந்த David Renz Galletes Balisong என்ற பிரிட்டானிய இளைஞர் காணமல் போனார். 

அவர் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் வழியாக மலேசியாவிற்குள் வந்ததாகவும் அவர் இன்னும் நாட்டிலேயே இருக்க கூடும் என்று நம்பப்படுவதாக  டத்தோ ஃபாடில் மர்சுஸ் தெரிவித்தார்.

காணாமல் போன இளைஞரை மீட்கும் பணியில் தனது தரப்பு தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக அவர் தனது அறிக்கையில் சுட்டிக் காட்டினார்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்த விசாரணைக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு ஊகங்களையோ அல்லது அறிக்கைகளையோ வெளியிட வேண்டாம் என்று அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset