நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தொழிற்சாலை பேருந்து கால்வாயில் கவிழ்ந்தது: ஓட்டுநர் உட்பட 22 பயணிகள் காயம்

கூலாய்:

தொழிற்சாலை பேருந்து கால்வாயில்  கவிழ்ந்த  சம்பவத்தில் ஓட்டுநர் உட்பட 22 பயணிகள் காயமடைந்தனர்.

கூலாய் மாவட்ட போலிஸ் தலைவர் டான் செங் லீ இதனை தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து போலிசாருக்கு காலை 7.17 மணிக்கு பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்தது.

38 வயதுடைய உள்ளூர் நபர் ஓட்டிச் சென்ற பேருந்து இடது புற சந்திப்பில் இருந்து வெளியேறும்போது கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.

பின்னர் பேருந்து வலது புறம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

சம்பவம் நடந்த நேரத்தில் 25 முதல் 30 வயதுக்குட்பட்ட 22 வெளிநாட்டு தொழிலாளர்கள் பேருந்தில் இருந்தனர் என்று ஆரம்பக் கட்டவிசாரணையில் கண்டறியப்பட்டது.

காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக இங்குள்ள தெமெங்கோங் ஸ்ரீ மகாராஜா துன் இப்ராஹிம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset