நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வழக்கறிஞர்கள் பேரணியில் பங்கேற்பதை பாஸ் கட்சி உறுதிப்படுத்தியது

புத்ராஜெயா:

புத்ராஜெயாவில் அடுத்த திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் நீதித்துறை சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான  பேரணியில் பங்கேற்பதை  பாஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் தக்கியூடின் ஹசான் இதனை உறுதிப்படுத்தினார்.

ஆம் இந்த பேரணியில் பாஸ் கட்சிபங்கேற்கும். குறிப்பாக பாஸ் கட்சியின் வழக்கறிஞர்கள் இதில் பங்கேற்பார்கள் என சுருக்கமாக கூறினார்.

மலேசிய வழக்கறிஞர்கள் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணி கூட்டரசு நீதிமன்றத்தில் தொடங்கி பிரதமர் அலுவலகத்தில் முடிவடையும்.

நாட்டின் நீதித்துறை நிறுவனங்களின் சுதந்திரத்தைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் ஒரு முக்கியமான குறிப்பாணையை சமர்ப்பிப்பதே இந்த பேரணியின் முக்கிய நோக்கமாகும்.

மலேசிய வழக்கறிஞர்கள் சங்கம் முன்னர் இந்த பேரணி எந்தவொரு தனிப்பட்ட நீதிபதியையும் பாதுகாப்பதற்காக அல்ல.

மாறாக நாட்டின் நீதித்துறை நிறுவனங்களின் நிலை குறித்து அதிகரித்து வரும் தீவிர கவலைகளை வெளிப்படுத்துவதற்காகவே என்று வலியுறுத்தியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset