நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஹெலிகாப்டர் விபத்து: விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க மொஸ்டி உறுதி

கோலாலம்பூர்:

அரச மலேசியப் போலீஸ்படையின் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான விசாரணைக்கு அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சு, மொஸ்டி முழு ஒத்தழைப்பு வழங்கும் என்று தெரிவித்துள்ளது. 

நேற்று அரச மலேசியப் போலீஸ்படைக்குச் சொந்தமான ஏஎஸ்355-என் ரக ஹெலிகாப்டர் சுங்கை பூலாய் நீர்ப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. 

இந்நிலையில் விபத்து தொடர்பாக நடத்தப்படும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை வழங்கவும் பாதுகாப்பின் அனைத்து அம்சங்களும் முழுமையாக ஆராயப்படுவதை உறுதி செய்வதற்கும் மொஸ்டி உறுதி பூண்டுள்ளது என்று அந்த அமைச்சு தனது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விசாரணை செயல்முறைக்கு எதிரான எந்தவொரு ஊகத்தையும் வெளியிட வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அமைச்சகம் அறிவுறுத்தியதுடன், மீட்புப் பணிகளில் ஈடுபட்ட அனைத்துth தரப்பினருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset