நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியா மற்ற நாடுகளுடனான வர்த்தகத்தை அதிகரிக்க வேண்டும்: துன் மகாதீர்

பெட்டாலிங் ஜெயா: 

அமெரிக்கா விதித்துள்ள 25 விழுக்காடு இறக்குமதி வரியின் தாக்கத்தைக் குறைக்க, சீனா உட்பட உலகின் பிற நாடுகளுடனான தனது வர்த்தகத்தை மலேசியா அதிகரிக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹம்மத் கருத்து தெரிவித்துள்ளார். 

அதிபர் டொனால்ட் டிரம்பின் பரஸ்பரி வரி கொள்கை அமெரிக்காவிற்கு எதிர்மறையான தாக்கத்தை விளைவிக்க கூடும் என்று மகாதீர் ப்ளூம்பெர்க்கிற்கு அளித்த பேட்டியில் கூறினார்.

இந்தப் பரஸ்பர வரி உலக நாடுகளைப் பாதித்தாலும் அமெரிக்கர்களையே இது அதிகம் பாதிக்கக்கூடும். 

காரணம் அமெரிக்கர்கள் தங்கள் சொந்த நாட்டில் அல்லாமல், மலேசியா, இந்தியா, சீனா போன்ற வெளிநாடுகளில் குறைந்த செலவில் தொழிற்துறை நிறுவனங்களை அமைத்திருக்கிறார்கள் என்றும் துன் மகாதீர் குறிப்பிட்டார். 

அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்பவர்கள் மட்டுமே மோசமாகப் பாதிக்கப்படுவார்கள் என்று மகாதிர் கூறினார்.

மற்ற நாடுகள் அதிக வரிகளை விதிக்கவில்லை என்று அவர் கூறினார்.

எனவே உலகின் மற்ற நாடுகளுடனான நமது வர்த்தகத்தை அதிகரிக்க வேண்டும். 

உதாரணமாக, சீனாவுடன். அமெரிக்காவைத் தவிர்ப்பதன் மூலம் டிரம்பின் அதிக வரிகளின் விளைவை ஓரளவுக்குக் குறைக்க முடியும் என்று அவர் கூறினார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset