நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நிறுவன இயக்குநரின் ஊழல் விசாரணையில் கோல்ப் கிளப்பை எம்ஏசிசி கைப்பற்றியது

கோலாலம்பூர்:

ஒரு நிறுவன இயக்குநருக்கு எதிரான ஊழல் விசாரணையில் கோல்ப் கிளப்பை எம்ஏசிசி கைப்பற்றியுள்ளது.

கிட்டத்தட்ட  75 மில்லியன் ரிங்கிட்  மதிப்புள்ள பணமோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு நிறுவன இயக்குநரிடம் எம்ஏசிசி விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த விசாரணையில் ஒரு கோல்ப் கிளப் உட்பட பல சொத்துக்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் பறிமுதல் செய்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களில் பங்களா வீடுகல், அடுக்குமாடி வீடுகள், அலுவலக வளாகங்கள், நிலங்கள், கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு கோல்ப் கிளப் ஆகியவை இதில் அடங்கும்.

இதன் மொத்த மதிப்பு 620 மில்லியன் ரிங்கிட்டாகும். மேலும்  சுமார் 2 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள நான்கு சொகுசு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

சந்தேக நபர் கோல்ப் கிளப்பில் பங்குதாரராகவும் இருப்பதாக நம்பப்படுகிறது.

இதுவரை, விசாரணைக்கு உதவுவதற்காக எம்ஏசிசி ஒன்பது சாட்சிகளின் வாக்குமூலங்களையும் பதிவு செய்துள்ளது.

எம்ஏசிசி சிறப்பு செயல்பாட்டுப் பிரிவின் மூத்த இயக்குனர் முகமது ஜம்ரி ஜைனுல் அபிடின் இந்தத் தகவலை உறுதிப்படுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset