நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போலிஸ் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்; இருவரின் உடல் நிலை ஆபத்தான நிலையில் உள்ளது: ஐஜிபி

ஜொகூர்பாரு:

போலிஸ் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கிய சம்பவத்தில் சிக்கிய இருவரின் உடல் நிலை ஆபத்தான நிலையில் உள்ளது.

தேசிய போலிஸ்படைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் காலித் இஸ்மாயில் இதனை தெரிவித்தார்.

கெலாங் பாத்தா சுங்கை பூலாயில் போலிஸ்படையின் AS355N ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கியது.

இதில் ஹெலிகாப்டரின் ஐந்து பணியாளர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

சம்பந்தப்பட்ட இருவர் இப்போது சுவாச உதவியைப் பெற்று வருகின்றனர். மேலும் மற்ற மூவரின் உடல் நிலை சீராக உள்ளது.

சுல்தானா அமினா மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர்களின் உதவியுடன், நாங்கள் அவர்களுக்கு சிறந்த சிகிச்சையை அளித்து வருகிறோம்.

இன்று மருத்துவமனையிம் அவசர, அதிர்ச்சிப் பிரிவில் சந்தித்தபோது அவர் சுருக்கமாக இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset