நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆசியான் - அமெரிக்க உச்ச நிலை மாநாட்டில் கலந்து கொள்ள டிரம்பிற்கு பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் அழைப்பு

புத்ராஜெயா:

ஆசியான் - அமெரிக்க உச்ச நிலை மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் அழைப்பு விடுத்துள்ளார்.

வரும்  அக்டோபரில் கோலாலம்பூரில்  ஆசியான்-அமெரிக்க உச்சநிலை  மாநாடு, கிழக்கு ஆசிய உச்ச நிலை மாநாடு தலைநகரில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாடுகளில் கலந்து கொள்ளுமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரப்பூர்வ அழைப்பு விடுத்துள்ளார்.

பிரதமர் ஒரு பேஸ்புக் பதிவில், அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ இன்று தன்னை மரியாதை நிமித்தமாக சந்தித்ததன் மூலம் இந்த அழைப்பு வழங்கப்பட்டதாக கூறினார்.

அமெரிக்காவுடனான நெருக்கமான ஒத்துழைப்பு இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒட்டுமொத்தமாக ஸ்திரத்தன்மை, செழிப்பு,  அமைதிக்கு ஒரு ஊக்கியாக இருக்கும் என்று மலேசியா நம்பிக்கை கொண்டுள்ளது என்று பிரதமர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset