நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபாக் பெர்ணாமில் ஏற்பட்ட அமில கசிவை சுத்தம் செய்ய 8 மணி நேரம் ஆனது

சபாக் பெர்ணாம்:

சபாக் பெர்ணாமில் ஏற்பட்ட அமில கசிவை சுத்தம் செய்ய தீயணைப்புப் படையினருக்கு கிட்டத்தட்ட  8 மணி நேரம் ஆனது.

இங்குள்ள ஜாலான் பெசார் சபாக் பெர்ணாமில் நேற்று இரவு இரண்டு லோரிகள் விபத்தில் சிக்கியது.

இந்த சம்பவம் தொடர்பாக  தீயணைப்புப் படையினருக்கு இரவு 7.13 மணிக்கு அழைப்பு வந்தது.

சபாக் பெர்ணாம், சுங்கை பெசார்,  ரவாங் தீயணைப்பு, மீட்பு நிலையங்களிலிருந்து இயந்திரங்களுடன் 24  அதிகாரிகள் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றது.

அமிலம் ஏற்றிச் செல்லும் லோரி, தேங்காய்களை ஏற்றிச் செல்லும் லோரியுட மோதிய விபத்துக்குள்ளானது.

இதனால் லோரியில் இருந்த அமிலம் சாலையில் கசிந்தது. சாலையில் கசிந்த அமிலத்தை சுத்தம் செய்ய எட்டு மணி நேரம் ஆனது.

சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புப் பிரிவின் உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் மொக்தார் இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset