நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காசாவில் அட்டூழியங்கள் நிறுத்தப்பட வேண்டும்: ரூபியோவிடம் பிரதமர் வலியுறுத்தினார்

கோலாலம்பூர்:

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் நடைபெற்று வரும் அட்டூழியங்கள், படுகொலைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோவிடம் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை வலியுறுத்தியுள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் ரூபியோவுடன் பிரதமர் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

சுமார் 40 நிமிட சந்திப்பின் போது பிற விஷயங்களைப் பற்றி விவாதித்ததாக பிரதமர் கூறினார்.

பாலஸ்தீனம், காசாவிற்கு மனிதாபிமான உதவி வழங்க அனுமதிக்கும் ஒரு போர் நிறுத்தம் ஏற்படும் என்று தாம் நம்பிக்கையுடன் இருப்பதாக அவர் கூறினார்.

அமைதி தொடர்பான பிற பிரச்சினைகளில், ஆக்கிரமிப்பு, இடையூறு ஏற்பட்டால் நாமும் பாதிக்கப்படுவோம் என்பதை நான் வலியுறுத்துகிறேன் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

முன்னதாக 2025ஆம் ஆண்டு ஆசியான் தலைமையின் கீழ் மலேசியா நடத்தும் 58ஆவது ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள ரூபியோ இங்கு வந்துள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset