நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டத்தோஸ்ரீ அன்வார் விடுப்பில் செல்ல வேண்டும்; இடைக்கால பிரதமர் பொறுப்பேற்க வேண்டும்: ஹம்சா ஜைனுடின்

கோலாலம்பூர்:

டத்தோஸ்ரீ அன்வார் உடனடியாக விடுப்பில் செல்ல வேண்டும். இடைக்கால பிரதமர் பொறுப்பேற்க வேண்டும்.

எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ  ஹம்சா ஜைனுடின் இதனை வலியுறுத்தினார்.

நீதித்துறை நியமன விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று இஸ்தானா நெகாரா எச்சரித்துள்ளது.

இருந்த போதிலும் நீதித்துறை நியமனங்களில் தலையிடுவது குறித்த கவலைகளைத் தொடர்ந்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தற்காலிக விடுப்பு எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையில் தேசியக் கூட்டணி உறுதியாக உள்ளது.

அரசியலமைப்பு சட்டம் பிரிவு 122பி இன் படி நீதிபதிகளை நியமிப்பது  மாமன்னரின் அதிகாரத்திற்கு உட்பட்டதாகும்.

இருந்த போதிலும் ஆட்சியாளர்களின் மாநாட்டைக் கலந்தாலோசித்த பிறகு பிரதமரின் ஆலோசனையும் கோரப்படுகிறது.

அரண்மனையின் இந்த கூற்றுடன் நாங்கள்  உடன்படுகிறோம்.

ஆனால் பல சிவில் வழக்குகளில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் சிக்கியுள்ளார்.

இதனால் ஓர் இடைக்கால பிரதமருக்கு அவர் வழிவிட வேண்டியிருக்கிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset