நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெண்கள் இலக்கவியல் மாற்றம், செயற்கை நுண்ணறிவு சவால்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்: டத்தோ ஹலிமா

கோலாலம்பூர்:

பெண்கள் இலக்கவியல் மாற்றம், செயற்கை நுண்ணறிவு சவால்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.

உலக பெண்கள் பொருளாதார, வணிக உச்ச நிலை மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் டத்தோ ஹலிமா முஹம்மத் சையத் இதனை கூறினார்.

பெண்கள் இதுபோன்ற சவால்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.

இதனால் அவர்கள் திறம்பட வழிநடத்தப்படுவார்கள்.

மேலும் உலகளாவிய பிரச்சினைகளைச் சமாளிப்பதில் அவர்கள் பின்தங்கியிருக்க மாட்டார்கள்.

பெண் தலைவர்கள் நம்பகத்தன்மையையும், தொலைநோக்குப் பார்வையை அர்த்தமுள்ள செயலாக மொழிபெயர்க்க தங்கள் குழுக்களை ஊக்குவிக்கும் திறனையும் நிரூபிக்க வேண்டும் என்று ஹலிமா கூறினார்.

பெரும்பாலும் தொலைநோக்குப் பார்வை, இலக்குகளுக்கு வலுவான முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

இருந்தாலும் நிறுவனங்களுக்குள் நேர்மறையான மாற்றத்தை உருவாக்குவது, கவர்ச்சிகரமான தலைமைத்துவத்தைக் கொண்டிருப்பது, முன்மாதிரியாக வழிநடத்துவது, அர்த்தமுள்ள முடிவுகளை நோக்கி இயக்கக்கூடிய உற்சாகத்தைத் தூண்டுவது ஆகியவை மிக முக்கியமானவை.

காரணம் தொலைநோக்குப் பார்வை, நோக்கங்கள் தெளிவாகவும் திறமையாகவும் தெரிவிக்கப்பட வேண்டும்.

இது அசாதாரணமான, முழுமையான விளைவுகளை வழங்கக்கூடியதாகவும் மாறும்.

இன்று உலக பெண்கள் பொருளாதார, வணிக உச்ச நிலை மாநாட்டில் உரையாற்றிய அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset