
செய்திகள் மலேசியா
நாட்டில் நிலவும் குறைவான பெண் பணியாளர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வுக் காணப்பட வேண்டும்: நூருல் இசா
கோலாலம்பூர்:
நாட்டில் நிலவும் குறைவான பெண் பணியாளர்கள் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும்.
கெஅடிலான் துணைத் தலைவர் நூருல் இசா அன்வார் இதனை வலியுறுத்தினார்.
இரட்டைப் பணிச் சுமையை சுமப்பதால் மில்லியன் கணக்கான பெண்கள் வேலையில்லாமல் உள்ளனர்.
இதனால் பணியிடங்கள் பெண்களின் பங்கேற்பு விகிதம் இன்னும் குறைவாக உள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு வரையிலான ஆய்வின் அடிப்படையில், பணியிடங்களில் பெண்களின் பங்களிப்பு 57 சதவீதமாக உள்ளது.
ஆண்களின் பங்கேற்பு விகிதம் கிட்டத்தட்ட 82 சதவீதமாக உள்ளது.
ஆனால் பல்கலைக்கழகப் படிப்பைத் தொடரும் பெண்களின் எண்ணிக்கை சுமார் 55.8 சதவீதமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குழந்தைப் பராமரிப்பின் சுமை, ஒரு குடும்பத்தை நிர்வகிப்பதற்கான ஊதியம் பெறாத பணிகளை அவர்கள் சுமக்கிறார்கள்.
இதனால் பெண்கள் வேலை செய்யாமல் இருப்பது அல்லது வேலை உலகத்தை விட்டு வெளியேற வேண்டியிருப்பது கட்டாயமாகிறது.
மலேசியாவில் 2018 ஆம் ஆண்டில் கசானா ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வில்,
ஒரு முழு நாள் வேலைக்குப் பிறகும் கூட, பெண்கள் ஆண்களை விட 60 சதவீதத்திற்கும் அதிகமான நேரத்தை ஊதியம் இல்லாத பராமரிப்பு வேலைகளில் செலவிடுகிறார்கள் என்பதைக் கண்டறிந்துள்ளது.
ஆக இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.
ஸ்ரீ பசிபிக் ஹோட்டலில் நடந்த உலக பெண்கள் பொருளாதார, வணிக உச்ச நிலை மாநாட்டில் உரையாற்றிய நூருல் இசா இதனை கூறினார்.
நூருல் இசாவுக்கு கோலாலம்பூர் பொருளாதார வியூக மன்றத்தின் தலைவர் டத்தோ ஸ்ரீ முஹம்மது இக்பால் நினைவுப் பரிசு வழங்கி சிறப்பு செய்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 11, 2025, 10:57 am
நாசி லெமக்கில் கரப்பான் பூச்சி: வாடிக்கையாளர் அதிர்ச்சி
July 11, 2025, 10:16 am
ஹெலிகாப்டர் விபத்து: விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க மொஸ்டி உறுதி
July 11, 2025, 9:55 am
சபாக் பெர்ணாமில் ஏற்பட்ட அமில கசிவை சுத்தம் செய்ய 8 மணி நேரம் ஆனது
July 11, 2025, 9:54 am
நிறுவன இயக்குநரின் ஊழல் விசாரணையில் கோல்ப் கிளப்பை எம்ஏசிசி கைப்பற்றியது
July 11, 2025, 9:53 am
வழக்கறிஞர்கள் பேரணியில் பங்கேற்பதை பாஸ் கட்சி உறுதிப்படுத்தியது
July 11, 2025, 9:40 am
மலேசியா மற்ற நாடுகளுடனான வர்த்தகத்தை அதிகரிக்க வேண்டும்: துன் மகாதீர்
July 11, 2025, 9:24 am
காணாமல் போன பிரிட்டன் இளைஞரைத் தேடும் பணி தீவிரம்: அரச மலேசியப் போலீஸ்படை
July 10, 2025, 10:36 pm