நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசு பல்கலைக்கழகங்களில் நுழைய எஸ்டிபிஎம் கல்வி சிறந்த தேர்வாகும்: செனட்டர் சரஸ்வதி கந்தசாமி

கிள்ளான்:

அரசாங்க பல்கலைக்கழகங்களில் நுழைய எஸ்டிபிஎம் கல்வி வாய்ப்பு மாணவர்களுக்கு சிறந்த தேர்வாகும்.

தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி இதனை கூறினார்.

நாட்டில் நமது மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் கல்வி வாய்ப்பு கிடைப்பதில்லை என்பது மிகப்பெரிய பிரச்சினையாகவே உள்ளது.

ஆனால் தகுதியான மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு நிச்சயம் கிடைக்கிறது என்று நான் நம்புகிறேன்.

அப்படி வாய்ப்பு கிடைக்காத மாணவர்கள் எஸ்டிபிஎம் கல்வியை தேர்வு செய்து படிக்க வேண்டும்.

காரணம் அரசாங்க பல்கலைக்கழகங்களில் நுழைய இந்த எஸ்டிபிஎம் கல்வி என்பது சிறந்த வாய்ப்பாக உள்ளது.

நமது மாணவர்கள் எஸ்டிபிஎம் தேர்வை கடினமானது என்று நினைப்பதால் பலர் இந்த வாய்ப்பை புறக்கணிக்கின்றனர்.

ஆனால் இந்த தேர்வில் முழுமையாக தேர்ச்சி பெறும் பட்சத்தில் அவர்கள் தேர்வு செய்யும் பல்கலைக்கழகமும் துறையும் எளிதாக கிடைக்கும் என்பதை மறந்து விடுகின்றனர்.

குறிப்பாக தமிழ் மொழியையும் தேர்வு பாடமாக எடுத்தும் படிக்கும் பட்சத்தில் நமது மாணவர்களுக்கு அரசாங்க பல்கலைக்கழகங்களில் நுழைவதற்கு கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கிறது.

ஆக நமது மாணவர்கள் இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும் இடைநிலைப் பள்ளிகள், படிவம் 6இல் தமிழ்மொழி பாடத்தை போதிக்க ஆசிரியர்கள் பற்றாக்குறை பிரச்சனைகள் தொடர்ந்து நிலவுகிறது.

இந்த பிரச்சினைக்கு கல்வியமைச்சு உரிய தீர்வை காணும் என தான் நம்புவதாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset