நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

STPM தமிழ்மொழி பாட வழிகாட்டி நூல் 700க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும்: செனட்டர் சரஸ்வதி

கிள்ளான்:

எஸ்டிபிஎம் தமிழ்மொழி பாட வழிகாட்டி நூல் 700க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.

தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கூறினார்.

மலேசிய உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் முயற்சியில் இந்த வழிக்காட்டி நூல் உருவாக்கப்பட்டு இன்று வெளியீடு காணவுள்ளது.

அரசாங்க உயர் கல்விக் கூடங்களில் இணைவதற்கு எஸ்டிபிஎம் மிகச் சிறந்த வாய்ப்பாகும்.

அப்படி எஸ்டிபிஎம் கல்வி வாய்ப்பை தேர்வு செய்த அனைத்து மாணவர்களுக்கும் எனது பாராட்டுகள்.

குறிப்பாக தமிழ்மொழியை பாடமாக தேர்வு செய்திருக்கும் எல்லா  மாணவர்களுக்கும் எனது வாழ்த்துகள்.

டாக்டர் கந்தசாமி தலைமையிலான மலேசிய உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் இந்த வழிகாட்டி நூல் குறித்து என்னிடம் கூறினர்.

இதுவொரு மகத்தான திட்டம். மேலும் இந்நூல் அனைத்து மாணவர்களையும் சென்றடைய வேண்டும். இதன் அடிப்படையில் எனது தனிப்பட்ட நிதியின் மூலம் இம்முயற்சிக்கு உதவினேன்.

இன்று இப்புத்தகம் அதிகாரப்பூர்வமாக வெளியீடு கண்டது. விரைவில் இப்புத்தகம் கிட்டத்தட்ட 700 மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளது.

இந்நூல் நிச்சயம் எஸ்டிபிஎம் தேர்வில் மாணவர்கள் தமிழ்மொழியில் சிறப்பு தேர்ச்சி பெற பெரும் உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.

மேலும் தமிழ்மொழியை மாணவர்கள் தொடர்ந்து பயில வேண்டும். இதன் மூலம் நமது தாய்மொழி காக்கப்படும் என்று சரஸ்வதி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset