நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மக்களின் நலனுக்காகவே நினைவில் இருக்க விரும்புகிறேன்: துன் டாக்டர் மகாதீர்

கோலாலம்பூர்: 

தான் செய்த பங்களிப்புகளுக்காக மட்டுமே மக்களின் நினைவில் இருக்க விரும்புவதாக  இன்று தனது 100வது பிறந்த நாளைக் கொண்டாடிய முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட், தெரிவித்துள்ளார்.

“அதிகாரத்திற்காக நினைவில் இருக்க விரும்பவில்லை. தவறு செய்தேன் என்று மக்கள் பழிப்பதையும் விரும்பவில்லை.
என் ஒரே விருப்பம் – மக்களுக்கு சிறந்த வாழ்க்கையை வழங்கவேண்டும் என்பதே,” என அவர் கூறினார்.

துன் மகாதீர், உத்துசான் மலேசியாக்கு அளித்த நேர்காணலில், தனது பணியினை மக்கள் சேவையாகவே பார்த்ததாகவும் தெரிவித்தார்.

“பிரதமராக வேண்டும் என்ற நோக்கம் எனக்கிருந்ததேயில்லை”

தாம் 1981ஆம் ஆண்டு தாம் பிரதமராக நியமிக்கப்பட்டது திட்டமிடப்பட்ட ஒன்றல்ல என துன் மகாதீர் தெரிவித்துள்ளார்.

“நான் பிரதமராக வேண்டுமென்று ஒருபோதும் ஆசைப்படவில்லை.
அந்தச் சூழ்நிலையில் நேரமும் இடமும் பொருந்தியது.
அதனால் அந்த பதவி எனக்குக் கிடைத்தது.
அது என் வாழ்க்கையின் மிகப்பெரிய சாதனை,” என அவர் குறிப்பிட்டார்.

பிரதமரின் வாழ்த்துக்கு நன்றி

துன் மகாதீர், தனது 100வது பிறந்த நாளையொட்டி அனுப்பிய வாழ்த்து செய்திக்காக தற்போதைய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு நன்றி தெரிவித்தார்.

“பிரதமரிடமிருந்து 100வது பிறந்த நாளுக்கான வாழ்த்து குறிப்பு வந்தது. அதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்,” என அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset