நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

RM 430,000 இழப்பீடு கோரிய வழக்கில் உமாவதி தோல்வி

கோலாலம்பூர்: 

2014ஆம் ஆண்டு சுங்கை புலோவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தில் மோட்டார் சைக்கிள்  மோதி காயம் அடைந்த பெண் ஒருவர், RM 430,000 இழப்பீட்டை கோரி காப்பீட்டு நிறுவனத்துக்கு எதிராகத் தாக்கல் செய்த வழக்கில், இறுதி முறையீட்டிலும் தோல்வி அடைந்துள்ளார்.

ஆ. உமாவதி என்பவர், 2014 நவம்பர் 16ஆம் தேதி பண்டார் பாரு சுங்கை புலோவில், ஒரு பைக் மோதி தன்னுடைய இடது கால் முழங்கைப் பகுதியில் கடுமையான காயங்கள் ஏற்பட்டதாகக் கூறியிருந்தார்.

இவ்வழக்கை விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம் நஸ்லான் காசாலி தலைமையில், உமாவதி தாக்கல் செய்த வழக்கில் நம்பகமான ஆதாரங்கள் இல்லை எனத் தீர்மானித்தது.

  1. •    சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை (registration number) உண்மையென நிரூபிக்க முடியவில்லை.
  2. •    பைக் ஓட்டியதாக குற்றம்சாட்டப்பட்ட அஹ்மட் சைஃபுல் மீது நேரடி ஆதாரமோ, விசாரணை அறிக்கையோ கிடைக்கவில்லை.
  3. •    உமாவதி, ஆரம்ப சிகிச்சை பெற்றபோது மருத்தவர்களிடம் “கார் மோதி காயமடைந்தேன்” எனக் கூறியிருந்தார். பின்னர் வழக்கில் “பைக் மோதி காயமடைந்தேன்” எனக் கூறியிருந்தது.•    இது வழக்கின் நம்பகத்தன்மையை குறைத்தது.
  4. மேலும், சைஃபுல் ஒரு போக்குவரத்து அபராதம் கட்டியிருந்தாலும், அது விபத்துடன் தொடர்புடையதா என்பது நிரூபிக்கப்படவில்லை.

இந்த வழக்கில் பைக் உரிமையாளர் சிதி ரோஸ்மாவதி மற்றும் Pacific & Orient Insurance Co Bhd ஆகியோர் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர்.

காப்பீட்டு நிறுவனம், வழக்கில் மோசடி உள்ளதாக சந்தேகித்ததால், தனி ஆய்வாளரைக் கொண்டு விசாரணை நடத்தி, வழக்கில் நேரடியாக தலையீடு செய்தது.

இதன் மூலம், முன்னதாக தீர்ப்பளித்த செஷன்ஸ் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற தீர்ப்புகள் அனைத்தும் இன்று மறு உறுதிப்படுத்தப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset