நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

பாக்கிஸ்தான் நடிகை சடலம் அழுகிய நிலையில் மீட்பு

இஸ்லாமாபாத்: 

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பிரபல நடிகையும், மாடல் அழகியின் பெயர் ஹுமைரா அஸ்கர். வயது 30. கராச்சி நகரில் வசித்து வந்தார். இவர், பாகிஸ்தானில் பிரபலமான ‘தமாஷா கர்’ ரியாலிட்டி ஷோ மூலமாகவும், ‘ஜிலேபி’ என்ற திரைப்படம் மூலமாகவும் பரவலாக அறியப்பட்டவர். கராச்சியில் உள்ள தனது குடியிருப்பில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக ஹுமைரா அஸ்கர் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், அவர் சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக வீட்டு வாடகை செலுத்தாததால், வீட்டை காலி செய்யுமாறு நீதிமன்றம் போலீசாருக்கு உத்தரவிட்டது. 

இந்த சூழலில் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதை அறிந்த அக்கம்பக்கத்து வீட்டார் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். நேற்று அதிகாலை 3 மணி அளவில் போலீசார் நடிகை அஸ்கரின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற போது அங்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு ஹுமைரா அஸ்கரின் உடல், அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

அவர் இறந்து சுமார் 20 நாட்கள் ஆகியிருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வீட்டில் யாரும் வலுக்கட்டாயமாக நுழைந்ததற்கான தடயங்கள் இல்லாததால், இது கொலையாக இருக்க வாய்ப்பில்லை என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. 

இருந்தாலும் ஹுமைரா அஸ்கரின் மரணத்திற்கான உண்மையான காரணம் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset