செய்திகள் விளையாட்டு
பிபா கிளப் உலகக் கிண்ண இறுதியாட்டத்தில் பிஎஸ்ஜி - செல்சி மோதல்
நியூஜெர்சி:
பிபா கிளப் உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் இறுதியாட்டத்தில் பிஎஸ்ஜி - செல்சி அணிகள் மோதவுள்ளன.
மெட் லைவ் அரங்கில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் பிஎஸ்ஜி அணியினர் ரியல்மாட்ரிட் அணியை சந்தித்து விளையாடினர்.
இரு முன்னணி அணிகள் மோதியதால் ஆட்டம் மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கியது.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பிஎஸ்ஜி அணியினர் 4-0 என்ற கோல் கணக்கில் ரியல்மாட்ரிட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
பிஎஸ்ஜி அணிக்காக பாபியன் ரூயிஸ் இரு கோல்களை அடித்தார். மற்ற கோல்களை ஓஸ்மனே டெம்பிள், கோன்சலோ ரமோஸ் ஆகியோர் அடித்தனர்.
இந்த வெற்றியை தொடர்ந்து பிஎஸ்ஜி அணியினர் பிபா கிளப் உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறினர்.
இறுதியாட்டத்தில் பிஎஸ்ஜி அணியினர் செல்சி அணியுடன் மோதவுள்ளனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 15, 2026, 4:24 pm
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: அபாரமாக ஆடி துனிசியாவை சுவீடன் வென்றது
June 15, 2026, 12:58 pm
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: 5-1 என்ற கணக்கில் துனிசியாவை வீழ்த்திய ஸ்வீடன்
June 15, 2026, 12:20 pm
ஏலத்திற்கு வரும் உலகக் கிண்ணப் போட்டி நினைவுப் பொருள்கள்
June 15, 2026, 9:28 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: நெதர்லாந்து - ஜப்பான் சமநிலை
June 15, 2026, 9:25 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: ஜெர்மனி கோல் மழை
June 14, 2026, 7:19 pm
உலகக் கிண்ண கால்பந்துப் போட்டி: ஆஸ்திரேலியாவிடம் தோற்றது துருக்கியே
June 14, 2026, 11:52 am
