செய்திகள் விளையாட்டு
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: பெல்ஜியம் - ஈரான் சமநிலை
லாஸ் ஏஞ்சல்ஸ்:
உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் பெல்ஜியம், ஈரான் அணிகள் மோதிய ஆட்டம் சமநிலையில் முடிந்தது.
ஜி பிரிவில் இடம்பெற்றுள்ள பெல்ஜியம், ஈரான் அணிகள் இடையிலான ஆட்டம் லாஸ் ஏஞ்சல்ஸ் அரங்கில் நடைபெற்றது.
இந்தப் போட்டி துவக்கம் முதலே பரபரப்பாக இருந்தது. இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முனைப்பு காட்டினர்.
எனினும், ஆட்டத்தின் முதல் பாதி வரை இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை.
ஆட்டத்தில் மீதம் இருந்த இரண்டாவது பாதியில் கோல் அடித்து வெற்றியை பெற பெல்ஜியம், ஈரான் அணிகள் போராட்டத்தை தொடர்ந்தன.
ஆட்டநேர முடிவு வரையிலும் இரு அணிகளால் ஒரு கோல் கூட அடிக்கமுடியவில்லை.
இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் நேரம் சற்றே நீட்டிக்கப்பட்டது.
கூடுதல் நேரம் வழங்கப்பட்ட போதிலும், இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை.
இறுதியில் ஆட்டம் சமநிலையாக அறிவிக்கப்பட்டது.
இன்றைய போட்டி சமநிலை ஆனதை தொடர்ந்து இரு அணகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 22, 2026, 12:54 pm
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: நியூஸிலாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது எகிப்து
June 22, 2026, 8:22 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: ஸ்பெயின் மகத்தான வெற்றி
June 21, 2026, 10:33 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: சுவீடனை வீழ்த்தியது நெதர்லாந்து
June 21, 2026, 10:32 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: 2ஆவது வெற்றியை பதிவு செய்த ஜெர்மனி
June 20, 2026, 6:09 pm
உலக சாம்பியனை வீழ்த்தி வரலாறு படைத்தார் சிவசங்கரி
June 20, 2026, 5:08 pm
‘underdog’ இல்லை, அசைக்க முடியாத போராளிகள்: துருக்கியை வீழ்த்தி பராகுவே
June 20, 2026, 11:37 am
உலகக் கிண்ண கால்பந்து: ஹைதியை பந்தாடியது பிரேசில்
June 20, 2026, 11:36 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அமெரிக்கா
June 19, 2026, 8:58 am
