நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலகக் கிண்ணம்: இங்கிலாந்து ஏமாற்றம்

போஸ்டன்:

உலகக் கிண்ணம் கால்பந்து போட்டியில் இங்கிலாந்து அணியினர் சமநிலை கண்டு ரசிகர்களை ஏமாற்றினர்.

உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து, கானா அணிகள் மோதின.


நடப்பு உலகக் கிண்ண தொடரின் எல் பிரிவில் இடம்பெற்றுள்ள இந்த இரு அணிகள் இடையிலான ஆட்டம் போஸ்டன் அரங்கில் நடைபெற்றது.

தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் கோல் அடிக்கும் முயற்சியில் இறங்கின. ஆட்டத்தின் முதல் பாதி வரை இதற்கான முயற்சி நீண்டது.

எனினும், இரு அணி வீரர்களாலும் கோல் அடிக்க முடியவிலலை.

இதன் காரணமாக முதல் பாதி ஆட்டம் கோல் கணக்கு துவங்காமலேயே முடிவுக்கு வந்தது.

வெற்றி பெறும் அணி எது என்ற பரபரப்புடன் இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியது.

ஆட்டத்தின் இறுதிவரை இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முயற்சி மட்டுமே செய்த நிலையில், ஆட்டம் சமநிலை ஆனதாக அறிவிக்கப்பட்டது.

இங்கிலாந்து, கானா இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset