செய்திகள் விளையாட்டு
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: ஸ்பெயின் மகத்தான வெற்றி
அட்லாண்டா:
உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் சவூதி அரேபியாவை 4-0 என்ற கணக்கில் பந்தாடி ஸ்பெயின் அபார வெற்றி பெற்றது.
எச் பிரிவில் இடம் பெற்றுள்ள ஸ்பெயின், சவுதி அரேபியா அணிகள் மோதின. இந்த போட்டி அட்லாண்டா மைதானத்தில் நடைபெற்றது.
ஆட்டம் தொடங்கியது முதலே கோல் அடிக்கும் முனைப்பில் ஸ்பெயின் அணி தீவிரம் காட்டியது.
இதற்கு பலனாக ஆட்டத்தின் பத்தாவது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் மைக்கல் ஒயர்சபால் தட்டிய பந்தை சரியாக பயன்படுத்திக் கொண்ட லெமானே யமால் கோலாக மாற்றினார்.
இதைத் தொடர்ந்து 21ஆவது நிமிடத்திலும் 24ஆவது நிமிடத்திலும் மைக்கேல் ஒயர்சபால் இரு கோல்களை அடிக்க ஸ்பெயின் அணி 3-0 என்ற நிலையை அடைந்தது.
ஒருபக்கம் ஸ்பெயின் கோல் கணக்கை அதிகப்படுத்த மறுப்பக்கம் சவூதி அரேபியா அணியின் கோல் முயற்சிகள் எதற்கும் பலன் கிடைக்கவில்லை.
பிற்பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க தீவிரம் காட்டிய நிலையில், 49ஆவது நிமிடத்தில் சவுதி அரேபிய வீரர் ஹாசன் அல்டாம்பக்தி ஓன் கோல் அடிக்க ஸ்பெயின் அணி 4-0 என முன்னேறியது.
ஆட்டத்தின் இறுதிவரை சவூதி அரேபியா அணியால் கோல் அடிக்க முடியவில்லை.
இதனால் ஸ்பெயின் அணி 4-0 என்ற கணக்கில் சவூதி அரேபியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இதன் மூலம் ஸ்பெயின் அணி தனது முதல் வெற்றி பதிவு செய்துள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 22, 2026, 12:54 pm
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: நியூஸிலாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது எகிப்து
June 22, 2026, 8:23 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: பெல்ஜியம் - ஈரான் சமநிலை
June 21, 2026, 10:33 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: சுவீடனை வீழ்த்தியது நெதர்லாந்து
June 21, 2026, 10:32 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: 2ஆவது வெற்றியை பதிவு செய்த ஜெர்மனி
June 20, 2026, 6:09 pm
உலக சாம்பியனை வீழ்த்தி வரலாறு படைத்தார் சிவசங்கரி
June 20, 2026, 5:08 pm
‘underdog’ இல்லை, அசைக்க முடியாத போராளிகள்: துருக்கியை வீழ்த்தி பராகுவே
June 20, 2026, 11:37 am
உலகக் கிண்ண கால்பந்து: ஹைதியை பந்தாடியது பிரேசில்
June 20, 2026, 11:36 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அமெரிக்கா
June 19, 2026, 8:58 am
