செய்திகள் விளையாட்டு
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: 5 கோல்களில் போர்த்துகல் வெற்றி
ஹூஸ்டன்:
உலக கிண்ண கால்பந்து லீக் போட்டியில் போர்த்துகல் அணியினர் அபார வெற்றியை பதிவு செய்தனர்.
அமெரிக்காவின் ஹூஸ்டனில் நடந்த கே பிரிவு லீக் போட்டியில் போர்த்துகல் அணியினர், உஸ்பெகிஸ்தான் அணியை சந்தித்தது.
போட்டி துவங்கிய 6ஆவது நிமிடத்தில் சக வீரர் ஜோயாவோ கேன்செலோ கொடுத்த பந்தை பெற்ற ரொனால்டோ அப்படியே கோலாக மாற்றினார்.
அடுத்து 17ஆவது நிமிடம் நுனோ மெண்டஸ் ஒரு கோல் அடித்தார்.
மீண்டும் சிறப்பாக செயல்பட்ட ரொனால்டோ, இம்முறை புருனோ பெர்னாண்டஸ் உதவியால், இரண்டாவது கோல் அடித்தார்.
58ஆவது நிமிடம் ரொனால்டோ அடித்த பந்தை கோல் காவலர் நெமடோவ் தடுக்க, ஹாட்ரிக் சாதனை வாய்ப்பு நழுவியது.
60ஆவது நிமிடத்தில் போர்ச்சுகல் அணிக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது.
இம்முறை புருனோ அடித்த பந்து, நெமடோவ் கையில் பட்டு, வலைக்குள் செல்ல, சொந்த கோல் ஆனது.
அடுத்து ரபேல் லியாவோ (87) ஒரு கோல் அடிக்க, போர்த்துகல் அணி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இவ்வாட்டத்தில் இரு கோல்களை அடித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது பலத்தை மீண்டும் நிரூபித்துள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 24, 2026, 12:01 pm
ஈரானிய கால்பந்து அணிக்கு விதித்திருந்த பயணக் கட்டுப்பாடுகளை அமெரிக்கா தளர்த்தியது
June 24, 2026, 11:04 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: பனமாவை வீழ்த்தியது குரோஷியா
June 24, 2026, 8:00 am
உலகக் கிண்ணம்: இங்கிலாந்து ஏமாற்றம்
June 23, 2026, 9:11 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: பிரான்ஸ் முன்னேற்றம்
June 23, 2026, 9:08 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் மெஸ்ஸி உலக சாதனை: அர்ஜெண்டினா வெற்றி
June 22, 2026, 12:54 pm
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: நியூஸிலாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது எகிப்து
June 22, 2026, 8:23 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: பெல்ஜியம் - ஈரான் சமநிலை
June 22, 2026, 8:22 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: ஸ்பெயின் மகத்தான வெற்றி
June 21, 2026, 10:33 am
