செய்திகள் விளையாட்டு
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: நியூஸிலாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது எகிப்து
நியூ யார்க்:
எகிப்து நியூஸிலந்து பொருதிய ஆட்டத்தில் 3-1 எனும் கோல் கணக்கில் எகிப்து வெற்றி பெற்றிருக்கிறது.
உலகக் கிண்ண வரலாற்றில் இதுவே எகிப்தின் முதல் வெற்றி.
ஆட்டத்தின் 15ஆவது நிமிடத்தில் நியூஸிலாந்தின் ஃபின் சர்மன் (Finn Surman) முதல் கோலைப் போட்டார்.
முற்பாதி முடியும்வரை நியூஸிலந்து முன்னிலையைத் தக்கவைத்தது. பிற்பாதியில் ஆட்டம் மாறியது.
58ஆவது நிமிடத்தில் முஸ்தஃபா ஸிக்கோ (Mostafa Zico) எகிப்தின் முதல் கோலை அடித்தார்.
67ஆவது நிமிடத்தில் நட்சத்திர ஆட்டக்காரர் முஹம்மது சாலா (Mohamed Salah) இரண்டாவது கோலை அடித்தார்.
82ஆவது நிமிடத்தில் எகிப்துக்கு மூன்றாவது கோல்.
இதுவரை நடந்த G பிரிவு ஆட்டங்களில் எகிப்து மட்டும் ஒருமுறை வெற்றிபெற்றிருக்கிறது.
அதன் முதல் ஆட்டம் சமநிலையில் முடிந்தது.
ஈரான், பெல்ஜியம் விளையாடிய இரு ஆட்டங்களும் சமநிலையில் முடிந்தன.
அதனால் 4 புள்ளிகள் பெற்ற எகிப்து பிரிவில் முதல் இடத்தில் இருக்கிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 22, 2026, 8:23 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: பெல்ஜியம் - ஈரான் சமநிலை
June 22, 2026, 8:22 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: ஸ்பெயின் மகத்தான வெற்றி
June 21, 2026, 10:33 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: சுவீடனை வீழ்த்தியது நெதர்லாந்து
June 21, 2026, 10:32 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: 2ஆவது வெற்றியை பதிவு செய்த ஜெர்மனி
June 20, 2026, 6:09 pm
உலக சாம்பியனை வீழ்த்தி வரலாறு படைத்தார் சிவசங்கரி
June 20, 2026, 5:08 pm
‘underdog’ இல்லை, அசைக்க முடியாத போராளிகள்: துருக்கியை வீழ்த்தி பராகுவே
June 20, 2026, 11:37 am
உலகக் கிண்ண கால்பந்து: ஹைதியை பந்தாடியது பிரேசில்
June 20, 2026, 11:36 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அமெரிக்கா
June 19, 2026, 8:58 am
