நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலகக் கிண்ண கால்பந்து போட்டி: சுவீடனை வீழ்த்தியது நெதர்லாந்து

ஹூஸ்டன்:

உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் சுவீடனை வீழ்த்தி நெதர்லாந்து அணியினர் அபார வெற்றியை பதிவு செய்தனர்.

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடந்த எப் பிரிவு லீக் போட்டியில் சுவீடன், நெதர்லாந்து அணிகள் மோதின.

தொடக்கத்தில் இருந்து நெதர்லாந்து அணி ஆதிக்கம் செலுத்தியது. 5, 17ஆவது நிமிடத்தில் அந்த அணியின் வீரர் பிரையன் பிராப்பி 2 கோல்களை அடித்தார்.

இதனையடுத்து முதல் பாதி முடிவில் நெதர்லாந்து அணி 2-0 என முன்னிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியிலும் நெதர்லாந்து அணி வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

47, 54ஆவது நிமிடத்தில் நெதர்லாந்து அணி வீரர் காக்போ 2 கோல்களை அடித்தார்.

தொடர்ந்து போராடிய சுவீடன் அணி 59ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தது. அந்த கோலை அந்த அணியின் வீரர் எலங்கா அடித்தார்.

பின்னர் 89ஆவது நிமிடத்தில் நெதர்லாந்தின் சம்மர்வில், ஒரு கோல் அடித்தார்.

இதன்மூலம் நெதர்லாந்து அணி 5 கோல்களை அடித்தது.

இறுதியில் நெதர்லாந்து அணி 5-1 என்ற கோல் கணக்கில் சுவீடனை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

ஜப்பானுக்கு எதிராக சமநிலை செய்த நெதர்லாந்து அணி தற்போது முதல் வெற்றியை பதிவு செய்தது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset