நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஈரானிய கால்பந்து அணிக்கு விதித்திருந்த பயணக் கட்டுப்பாடுகளை அமெரிக்கா தளர்த்தியது

சியெட்டல்:

ஈரானிய கால்பந்து அணிக்கு விதித்திருந்த பயணக் கட்டுப்பாடுகளை அமெரிக்கா தளர்த்தியுள்ளது.

நாளை மறுநாள் அதாவது 26 ஜூன் அன்று  சியெட்டல் (Seattle) நகரில் நடைபெறவுள்ள ஆட்டத்துக்கு 2 நாள் முன்னதாக அவர்களை அமெரிக்காவுக்குள் அனுமதிக்க அது வகைசெய்யும்.

அது ஈரானின் 3ஆவது ஆட்டம். அது எகிப்துடன் மோத உள்ளது.

இதற்கு முன் அவர்கள் ஆட்டத்துக்கு முதல் நாள் அங்கு செல்வதற்கு மட்டுமே அனுமதி இருந்தது.

இருப்பினும் அவர்கள் ஆட்டம் முடிந்தவுடனே அமெரிக்காவிலிருந்து வெளியேறிவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே வெற்றிபெறும் அணிக்கு உலகக் கிண்ணக் கோப்பையை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) வழங்குவார் என்று FIFA தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ (Gianni Infantino) கூறியுள்ளார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset