செய்திகள் விளையாட்டு
உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் மெஸ்ஸி உலக சாதனை: அர்ஜெண்டினா வெற்றி
டல்லாஸ்:
உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் லியோனல் மெஸ்ஸி உலக சாதனை படைத்துள்ளார்.
உலகக் கிண்ண கால்பந்து திருவிழாவில் ஜே பிரிவில் நடந்த லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் அர்ஜெண்டினா அணி ஆஸ்திரியா அணியை சந்தித்து விளையாடினர்.
ஆட்டத்தின் ஆரம்பம் முதலே இரு அணிகளும் மிகக் கடுமையான பலப்பரீட்சையில் ஈடுபட்டன.
ஆட்டத்தின் 9ஆவது நிமிடத்தில் அர்ஜெண்டினா அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.
ஆனால், அதனை எடுத்த கேப்டன் லியோனல் மெஸ்ஸி, எதிர்பாராதவிதமாக கோலாக மாற்றத் தவறினார். இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இருப்பினும், ஆட்டத்தின் 38ஆவது நிமிடத்தில் மெடினா கொடுத்த பாஸை மிகத் துல்லியமாகப் பெற்று, ஆஸ்திரியா கோல் காவலரை ஏமாற்றி பந்தை வலைக்குள் தள்ளினார் மெஸ்ஸி.
இதன் மூலம் உலகக் கிண்ண வரலாற்றில் தனது 17ஆவது கோலைப் பதிவு செய்து, ஜெர்மனியின் மிரோஸ்லாவ் குளோசேயின் (16 கோல்கள்) சாதனையை முறியடித்து அதிக கோல் அடித்த வீரர் என்ற வரலாறு படைத்தார்.
முதல் பாதியில், அர்ஜெண்டினா 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
பிற்பாதியின் கூடுதல் நேரத்தில் (90+5 நிமிடம்), பந்தை கொண்டு சென்ற மெஸ்ஸி, அங்கிருந்த 4 ஆஸ்திரிய வீரர்களை ஏமாற்றி கோல் அடித்து அசத்தினார்.
முடிவில் அர்ஜெண்டினா அணி 2-0 என வென்றது. தொடர்ந்து இரு வெற்றி பெற்று அர்ஜெண்டினா, 6 புள்ளியுடன் 'ரவுண்டு-16' சுற்றுக்கு முன்னேறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 23, 2026, 9:11 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: பிரான்ஸ் முன்னேற்றம்
June 22, 2026, 12:54 pm
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: நியூஸிலாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது எகிப்து
June 22, 2026, 8:23 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: பெல்ஜியம் - ஈரான் சமநிலை
June 22, 2026, 8:22 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: ஸ்பெயின் மகத்தான வெற்றி
June 21, 2026, 10:33 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: சுவீடனை வீழ்த்தியது நெதர்லாந்து
June 21, 2026, 10:32 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: 2ஆவது வெற்றியை பதிவு செய்த ஜெர்மனி
June 20, 2026, 6:09 pm
உலக சாம்பியனை வீழ்த்தி வரலாறு படைத்தார் சிவசங்கரி
June 20, 2026, 5:08 pm
‘underdog’ இல்லை, அசைக்க முடியாத போராளிகள்: துருக்கியை வீழ்த்தி பராகுவே
June 20, 2026, 11:37 am
