நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின் தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி; 100 அணிகள் பங்கேற்கவுள்ளன: பத்துமலை

பெட்டாலிங்ஜெயா:

பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின் தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி 100 அணிகள் பங்கேற்கவுள்ளன.

அக் கால்பந்து சங்கத்தின் தலைவர் பத்துமலை இதனை அறிவித்தார்.

சிலாங்கூர் – கூட்டரசுப் பிரதேச தமிழ்ப்பள்ளிகள் இடையிலான கால்பந்து போட்டி 21ஆம் ஆண்டாக நடைபெறுகிறது.

இப்போட்டி வரும் ஜூலை மாதம் 12ஆம் தேதி சுங்கை பூலோ ஆர்ஆர்ஐ திடலில் நடைபெறும்.

சிலாங்கூர் மாநில கால்பந்து சங்கம், சிலாங்கூர் – கூட்டரசுப் மாநில தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர் மன்றம், மஇகா ஆதரவில் இந்த போட்டி நடத்தப்படுகிறது.

இம்முறை மாணவர்கள் பிரிவில் 68 குழுக்களும் மாணவிகள் பிரிவில் 32 குழுக்களும் பங்கேற்கிறது.

ஆக மொத்தம் இம்முறை 100 குழுக்கள் பங்கேற்பது மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது.

ஆண்கள் பிரிவில் வெற்றி பெறும் குழுவுக்கு நமச்சிவாயம் கிண்ணமும், பெண்கள் பிரிவில் வெற்றி பெறும் குழுவுக்கு ரவீந்திரன் கிண்ணமும்  பரிசாக வழங்கப்படும்.

குறிப்பாக ஆண், பெண் இரு பிரிவுகளிலும் வெற்றி பெறும் முதல் அணிக்கு தலா 2000 ரிங்கிட் பரிசாக வழங்கப்படும்.

இரண்டாவது இடத்திற்கு 1,000 ரிங்கிட்டும் மூன்றாவது நான்காவது இடத்திற்கு தலா 500 ரிங்கிட்டும் பரிசாக வழங்கப்படும்.

5, 6ஆம் இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு 250 ரிங்கிட்டும் 7 முதல் 16ஆவது இடம் பிடிக்கும் அணிகளுக்கு தலா 100 ரிங்கிட்டும் பரிசாக வழங்கப்படவுள்ளது.

மேலும் மலேசிய தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள் மன்றத்தின் சார்பிலும் வெற்றி பெறும் அணிகளுக்கு ரொக்கப்பரிவுகள் வழங்கப்படவுள்ளது.

ஆக இக்கால்பந்து போட்டியை காண பொதுமக்கள் திரளாக வந்து ஆதரவை தர வேண்டும் என பத்துமலை கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset