
செய்திகள் மலேசியா
பாஸ் தலைவர் பதவியில் எனக்கு ஆர்வமில்லை: அஹ்மத் சம்சூரி
பெசுட்:
பாஸ் தலைவர் பதவியில் எனக்கு ஆர்வமில்லை திரெங்கானு மந்திரி புசார் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் சம்சூரி மொக்தார் கூறினார்.
பாஸ் கட்சியின் தேர்தல் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இத்தேர்தல் தலைவர் பதவிக்கான போட்டி குறித்து பரவலாக பேசப்படுகிறது.
இந்நிலையில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வாய்ப்பை பாஸ் துணைத் தலைவருமான அவர் நிராகரித்துள்ளார்.
தற்போதைய துணைத் தலைவர் பதவியால் ஏற்கனவே என்னால் தாங்க முடியாத அளவுக்கு அதிகமாக பணிகள் உள்ளது.
எனக்கு வேறு பதவி வேண்டாம் என்று நினைக்கிறேன்.
மேலும் பாஸ் கட்சியின் தலைவராக இருப்பதன் பொறுப்பு மிகவும் கனமானது. ஆகையால் தலைவர் பதவிக்கு போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை.
அலோர் கெலாடி இசிஆர்எல் ரயில் நிலையத் திட்டத்தைப் பார்வையிட்டபோது அவர் இதனை செய்தியாளர்களிடம் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 9, 2025, 8:00 pm
மாணவி மணிஷாப்ரீத் கொலை வழக்கு: இரண்டு சந்தேக நபர்கள் மீது நாளை குற்றம் சாட்டப்படும்
July 9, 2025, 3:38 pm