நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போலி ஆயுதங்கள் வைத்திருந்தது, அச்சுறுத்தல் உட்பட வாகன நிறுத்துமிட உதவியாளர் மீது 11 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன

கோலாலம்பூர்:

போலி ஆயுதங்கள் வைத்திருந்தது, அச்சுறுத்தல் உட்பட வாகன நிறுத்துமிட உதவியாளர் மீது 11  குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இக்குற்றச்சட்டுகளை 27 வயதான ஆர். சஞ்சீவ் மறுத்து விசாரணை கோரியுள்ளார்.

இந்த மாத தொடக்கத்தில் போலி ஆயுதங்களை வைத்திருந்ததுடன் 4 ஆடவர்களை மிரட்டியதாக கூறி அவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் கைதான அவர் மீது  நீதிபதிகள் எம்.எஸ். அருண்ஜோதி, நூர்லின்னா ஹனிம் அப்துல் ஹலிம், இல்லி மரிஸ்கா கலிசான் ஆகியோர் முன்னிலையில் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டது.

இக்குற்றச்சாட்டுகளை மறுத்து அவர் விசாரணை கோரியுள்ளார்.

1960ஆம் ஆண்டு ஆபத்தான ஆயுதச் சட்டத்தின் பிரிவு 36 இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒரு வருடம் வரை சிறைத்தண்டனையும் அதிகபட்சமாக 5,000 ரிங்கிட் அபராதமும் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset