
செய்திகள் மலேசியா
மாணவி மணிஷாப்ரீத் கொலை வழக்கு: இரண்டு சந்தேக நபர்கள் மீது நாளை குற்றம் சாட்டப்படும்
சிப்பாங்:
மாணவி மணிஷாப்ரீத் கொலை வழக்கில் இரண்டு சந்தேக நபர்கள் மீது நாளை குற்றம் சாட்டப்படும்.
சிப்பாங் மாவட்ட போலிஸ் தலைவர் நோர்ஹிசாம் பஹாமன் இதனை உறுதிப்படுத்தினார்.
கடந்த ஜூன் 24ஆம் தேதி சரவாக்கைச் சேர்ந்த 20 வயதான பிசியோதெரபி இளங்கலை மாணவி மணிஷாப்ரீத் கவுர் காலை 10 மணிக்கு சைபர்ஜெயாவில் உள்ள தனது தங்கும் விடுதியில் இறந்து கிடந்தார்.
இதைத் தொடர்ந்து ஜொகூர், மலாக்காவில் நடந்த சோதனைகளில் சம்பவம் நடந்த 48 மணி நேரத்திற்குள் பல சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதில் இந்த வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரண்டு நபர்கள் மீது நாளை சிப்பாங் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.
முக்கிய சந்தேக நபர்களான ஒரு ஆண், 20 வயது பெண் மீது நாளை காலை 8.30 மணிக்கு தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் குற்றம் சாட்டப்படுவார்கள் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 9, 2025, 10:37 pm
புத்ராஜெயாவில் நடைபெறவிருக்கும் வழக்கறிஞர்கள் பேரணியில் கலந்து கொள்ள மாட்டேன்: ரபிசி
July 9, 2025, 10:34 pm
பிரதமருக்கு சட்ட சிக்கல்கள் இருக்கும் வரை நீதித்துறை சுதந்திரம் உறுதி செய்யப்படாது: மொஹைதின்
July 9, 2025, 4:34 pm
பாஸ் தலைவர் பதவியில் எனக்கு ஆர்வமில்லை: அஹ்மத் சம்சூரி
July 9, 2025, 3:38 pm