நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அர்ச்சகர் மீது பாலியல் புகார்:  “தவறு நடந்திருந்தால், கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும்”  – மஹிமா தலைவர் டத்தோ சிவக்குமார் கண்டனம்

பெட்டாலிங் ஜெயா, 
சிப்பாங்கில் உள்ள ஓர் இந்து ஆலயத்தில் நடந்ததாகக் கூறப்படும் பாலியல் துன்புறுத்தல் புகார் தொடர்பாக, மலேசிய இந்து ஆலய அமைப்புகளின் பேரவை (MAHIMA) தலைவர் டத்தோ சிவக்குமார் கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

“தவறு நடந்திருந்தால், அது எந்த சூழ்நிலையிலும் மன்னிக்கூடியது அல்ல, குற்றவாளி சட்ட அடி ப்படையில் தண்டிக்கப்பட வேண்டும். இது தொடர்பாக போலீசார் முழுமையான விசாரணை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.

அத்துடன், இவ்வாறு ஆலயப் புனிதத்தைக் களங்கப்படுத்தக்கூடிய சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருக்க, அனைத்து ஆலய நிர்வாகங்களும் தங்களது விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதனிடையே இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட “சாலாக் திங்கி மாரியம்மன் ஆலய நிர்வாகம்,  காவல்துறைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,” என்றும் டத்தோ சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

முன்னதாக , கடந்த ஜூலை 4ஆம் தேதி  27 வயதுடைய மலேசிய நடிகை சிப்பாங்கில் உள்ள ஓர் ஆலயத்தில் தாம் பாலியல் துன்புறுத்தலில் பாதிக்கப்பட்டதாக போலீஸ் புகார் செய்தார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின்படி, ஆலய அர்ச்சகர் பூஜைக்கான நீரை அவரது முகத்திலும் உடலிலும் தேவையற்ற முறையில் தெளித்ததுடன், அவமானப்படுத்தும் வகையில் நடந்துகொண்டதாக கூறப்படுகின்றது.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையைத் தொடங்கி, சம்பந்தப்பட்ட அர்ச்சகரை தேடி வருகின்றனர்.

சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் நோர்ஹிசாம் பஹமான் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த சம்பவம் மலேசிய குற்றவியல் சட்டத்தின் 354ம் பிரிவின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டுகள் வரை சிறைதண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset