
செய்திகள் மலேசியா
2023 மே மாதத்திற்கு பிறகு முதல் முறையாக ஓபிஆர் 2.75 சதவீதமாகக் குறைந்துள்ளது
கோலாலம்பூர்:
கடந்த 2023 மே மாதத்திற்கு பிறகு முதல் முறையாக வங்கிகளில் ஓபிஆர் 2.75 வட்டி விகிதம் சதவீதமாகக் குறைந்துள்ளது.
பேங்க் நெகாரா நாணயக் கொள்கைக் குழு ஓர் அறிக்கையில் இதனை அறிவித்தது.
வங்கி கடன்களுக்கான வட்டி விகிதம் 3 சதவீதமாக நிலை நிறுத்தப்பட்டிருந்தது.
தற்போது 25 அடிப்படைப் புள்ளிகள் குறைத்து 2.75 சதவீதமாக மாற்ற முடிவு செய்துள்ளது.
மே 2023 க்குப் பிறகு 12 முறை விகிதத்தைப் பராமரித்த பிறகு, மத்திய வங்கி ஓபிஆரை குறைப்பது இதுவே முதல் முறை.
உலகளாவிய வளர்ச்சி தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. மேலும் நிலையான பயனீட்டாளர்களின் செலவு, ஓரளவிற்கு எதிர்பார்க்கப்படும் செயல்பாடுகளால் ஆதரிக்கப்படுகிறது.
உலகளாவிய வளர்ச்சி வாய்ப்புகள் நேர்மறையான தொழிலாளர் சந்தை நிலைமைகள், தளர்வான பணவியல் கொள்கை, நிதி ஊக்குவிப்பு ஆகியவற்றால் தொடர்ந்து ஆதரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 9, 2025, 8:00 pm
மாணவி மணிஷாப்ரீத் கொலை வழக்கு: இரண்டு சந்தேக நபர்கள் மீது நாளை குற்றம் சாட்டப்படும்
July 9, 2025, 4:34 pm