நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கூடுதல் உத்தரவு இருப்பதை சட்டத்துறை தலைவர்  ஒப்புக்கொண்டால் நஜிப்பின் மறுஆய்வு மனுவை முன்னதாகவே விசாரிக்கலாம்

புத்ராஜெயா:

கூடுதல் உத்தரவு இருப்பதை சட்டத்துறை தலைவர் ஒப்புக்கொண்டால் நஜிப்பின் மறுஆய்வு மனுவை முன்னதாகவே விசாரிக்கலாம் என கூட்டரசு நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பின் சிறைத் தண்டனை தொடர்பான கூடுதல் கூடுதல் உத்தரவு இருப்பதை சட்டத்துறை தலைவர்  ஒப்புக் கொள்ள வேண்டும்.

இதன் மூலம் நஜிப்பின் நீதித்துறை மறுஆய்வு மனுவை உயர்நீதிமன்றத்தில் முன்னதாகவே விசாரிக்க முடியும்.

துணை பிரமாணப் பத்திரம் வதந்திகள், ஊகத் தகவல்களின் அடிப்படையில் அமைந்தது, உத்தரவு இல்லை.

இதன் அடிப்படையில் மறுஆய்வுக்கான அனுமதி கோரிய நஜிப்பின் விண்ணப்பத்தை சட்டத்துறை தலைவர் எதிர்த்ததாக முன்னாள் பிரதமரின் வழக்கறிஞர் டான்ஶ்ரீ ஷாபி அப்துல்லா கூறினார்.

மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் கூட சட்டத்துறை தலைவர் அதன் இருப்பை உறுதிப்படுத்தவில்லை.

ஆனால் இறுதியாக கூட்டரசு நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார், என்று மலாயா தலைமை நீதிபதி ஹஸ்னா ஹாஷிம் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட குழு முன் டான்ஶ்ரீ  ஷாபி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset