
செய்திகள் மலேசியா
ஆலயத்தில் பெண் பக்தரிடம் தகாத முறையில் நடந்து கொண்ட குருக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: மலேசிய இந்து சங்கம்
கோலாலம்பூர்:
ஆலயத்தில் பெண் பக்தரிடம் தகாத முறையில் நடந்து கொண்ட குருக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மலேசிய இந்து சங்கத் தலைவர் தங்க கணேசன் இதனை வலியுறுத்தினார்.
சிப்பாங் சாலாக் திங்கி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் பெண் பக்தர் ஒருவரிடம் மீது ஒரு பூசாரி மேற்கொண்ட தகாதச் செயலை மலேசிய இந்து சங்கம் கடுமையாகக் கண்டிக்கிறது.
இது ஒரு ஆலயத்தின் தூய்மைக்கும், இந்து மதத்தின் நெறிமுறைக்கும் எதிரான ஒரு அக்கிரமச் செயல் ஆகும்.
ஆலயங்கள் என்பது பக்தர்கள் ஆன்மிக நம்பிக்கையுடன் சென்று உளச்சாந்தியைப் பெறும் புனித இடங்கள்.
அத்தகைய இடங்களில் இந்த மாதிரியான தவறான நடவடிக்கைகள் நிகழ்வது மிகுந்த வருத்தத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.
இது இந்து சமுதாயத்தின் நற்பெயரை மங்கச் செய்யும் செயல் எனவும், எந்த விதத்திலும் எங்களது அமைப்பால் ஏற்க முடியாதது.
மேலும் சம்பந்தப்பட்ட குருக்களுக்கு எதிராக கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.
இதற்கு போலிஸ் உட்பட அனைத்து தரப்பினருடன் இணைந்து பணியாற்ற இந்து சங்கம் தயாராக உள்ளது.
மேலும் கோயில்களில் பணியாற்றும் குருக்கள், மத பணியாளர்களின் நடத்தை குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த விழிப்புணர்வும், கட்டுப்பாடும் அதிகரிக்க வேண்டும்.
இந்த சம்பவம் போன்றவை இனிமேலும் நடைபெறாதவாறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு முறைகள் கோயில்களில் அமல்படுத்தப்பட வேண்டும்.
இது போன்ற கொடூர சம்பவங்களை சமுதாயமாக நாம் ஒற்றுமையுடன் எதிர்க்க வேண்டும்.
இந்து மதத்தின் உயர்ந்த ஆன்மிகத்தன்மையை பாதுகாக்க அனைவரும் ஒருமித்த முறையில் செயல்பட வேண்டும் என தங்க கணேசன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 9, 2025, 8:00 pm
மாணவி மணிஷாப்ரீத் கொலை வழக்கு: இரண்டு சந்தேக நபர்கள் மீது நாளை குற்றம் சாட்டப்படும்
July 9, 2025, 4:34 pm
பாஸ் தலைவர் பதவியில் எனக்கு ஆர்வமில்லை: அஹ்மத் சம்சூரி
July 9, 2025, 3:38 pm