
செய்திகள் மலேசியா
கஜகஸ்தான் தூதருடனான சந்திப்பு; இந்திய முஸ்லிம்களின் அனைத்துலக வர்த்தக விரிவாக்கத்திற்கு பயனளிக்கும்: மிம்கோய்ன்
கோலாலம்பூர்:
கஜகஸ்தான் தூதருடனான சந்திப்பு இந்திய முஸ்லிம்களின் அனைத்துலக வர்த்தக விரிவாக்கத்திற்கு பயனளிக்கும்.
மிம்கோய்ன் எனப்படும் மலேசிய இந்திய முஸ்லிம் வர்த்தக தொழிலியல் சம்மேளத்தின் தலைவர் டத்தோ பிவி அப்துல் ஹமித் இந்த நம்பிக்கை தெரிவித்தார்.
நாட்டில் பெரும்பாலான இந்திய முஸ்லிம் வர்த்தகர்கள் மிம்கோய்னில் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த உறுப்பினர்கள் தங்கள் வர்த்தகத்தை அனைத்துலக ரீதியில் விரிவாக்கம் செய்ய வேண்டும்.
இதன் அடிப்படையில் தான் இங்குள்ள பல நாடுகளின் தூதர்களை தொடர்ச்சியாக நாங்கள் சந்தித்து வருகிறோம்.
அவ்வகையில் கஜகஸ்தான் தூதர் புலாட் சுகுர்பயேவ்வுடனான சந்திப்புக் கூட்டத்தில் நாங்கள் கலந்து கொண்டோம்.
அவருடனான சந்திப்பு மிகவும் அர்த்தமுள்ள சந்திப்பாக அமைந்துள்ளது.
குறிப்பாக மிம்கோய்ன் உறுப்பினர்கள் பயனளிக்கக்கூடிய உற்சாகமான அனைத்துகல வணிக வாய்ப்புகளுக்கான கதவைத் திறந்துள்ளது என்று டத்தோ அப்துல் ஹமித் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 9, 2025, 8:00 pm
மாணவி மணிஷாப்ரீத் கொலை வழக்கு: இரண்டு சந்தேக நபர்கள் மீது நாளை குற்றம் சாட்டப்படும்
July 9, 2025, 4:34 pm
பாஸ் தலைவர் பதவியில் எனக்கு ஆர்வமில்லை: அஹ்மத் சம்சூரி
July 9, 2025, 3:38 pm