நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆசியான் உலகளவில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது: பிரதமர் அன்வார் 

கோலாலம்பூர்:

ஆசியான் உலகளவில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளதாகப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். 

தனது அண்மைய வெளிநாட்டு பயணத்தின் போது பலர் ஆசியான் குறித்துக் கேட்டதாகவும் அதற்கு உலக அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் பிரதமர் அன்வார் குறிப்பிட்டார். 

வெளிநாட்டுத் தலைவர்களுடனான ஒவ்வொரு சந்திப்பிலும், அவர்கள் ஆசியான் பற்றி கேட்கத் தவறியதில்லை என்று இன்று நடைபெற்ற 58-ஆவது ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின் போது தனது உரையில் கூறினார். 

10 நாடுகளைக் கொண்ட இந்த ஆசியான் அமைப்பு உலக மதிப்பைப் பெற்றுள்ளது.

ஆசியானின் பங்கை அனைவரும் அங்கீகரிக்கின்றனர். அது தற்போது உலகளவில் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது என்றார் பிரதமர் அன்வார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset