நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வரிகள், ஏற்றுமதி கட்டுப்பாடுகள், முதலீட்டுத் தடைகள் புவி அரசியல் போட்டியில் கூர்மையான ஆயுதங்களாக மாறிவிட்டன: பிரதமர்

கோலாலம்பூர்:

வரிகள், ஏற்றுமதி கட்டுப்பாடுகள், முதலீட்டுத் தடைகள் புவி அரசியல் போட்டியில் கூர்மையான ஆயுதங்களாக மாறிவிட்டன.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

புவி அரசியல் போட்டியை ஆசியான் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் இப்போட்டியில்   வரிகள், ஏற்றுமதி கட்டுப்பாடுகள், முதலீட்டுத் தடைகள் இப்போது கூர்மையான ஆயுதங்களாக மாறிவிட்டன.

வர்த்தகத்தை வடிவமைப்பதற்கும் வளர்ச்சியை உருவாக்குவதற்கும் அதிகாரம் இனி ஒரு கருவி அல்ல.

மாறாக அழுத்தம் கொடுப்பது, தனிமைப்படுத்துவது மற்றும் தடைகளை விதிப்பதில் கவனம் செலுத்துவதாக இந்த சூழ்நிலை காட்டுகிறது.

இந்த நிலைமை தற்காலிகமானது அல்ல. மாறாக உலகம் எதிர்கொள்ள வேண்டிய ஒரு புதிய நிலப்பரப்பாக உள்ளது.

ஆசியான் இந்த யதார்த்தத்தை தெளிவுடனும் நம்பிக்கையுடனும் எதிர்கொள்ள வேண்டும்.

நாம் நிலப்பரப்பை புறநிலையாக மதிப்பிட வேண்டும், ஒற்றுமையுடன் பேச வேண்டும். தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட வேண்டும் என்று டத்தோஶ்ரீ அன்வார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset