நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிறுவர்களிடம் ஓரினச் சேர்க்கை, பாலியல் வன்கொடுமை; அண்டை நாட்டுக்கு தப்பிக்க முயன்ற பாகிஸ்தான் ஆடவர் கைது

ஷாஆலம்:

சிறுவர்களிடம் ஓரினச் சேர்க்கை, பாலியல் வன்கொடுமை ஆகிய வழக்குகளில் தொடர்புடைய பாகிஸ்தான் ஆடவர் அண்டை நாட்டுக்கு தப்பிக்க முயன்ற போது கைது செய்யப்பட்டார்.

ஷாஆலம் மாவட்ட போலிஸ் தலைவர் முகமட் இக்பால் இப்ராஹிம் இதனை கூறினார்.

பல சிறுவர்களுக்கு எதிரான ஓரினச் சேர்க்கை , பாலியல் வன்கொடுமை வழக்கில் முக்கிய சந்தேக நபராக சந்தேகிக்கப்படும் பாகிஸ்தானிய நபரை போலிசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் அவ்வாடவர் நேற்று கெடாவின் கோலா நெராங்கில் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் நாட்டின் வடக்குப் பகுதிக்கு தப்பிச் செல்வதற்கு முன்பு  கைது செய்யப்பட்டார்.

9, 13, 14, 19 வயதுடைய ஆண் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிரான நான்கு தொடர் ஓரினச்சேர்க்கை, பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் அவர்  ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

ஷாஆலம் போலிஸ்படையின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்புக் குழு மலேசியாவிலிருந்து அண்டை நாட்டிற்குத் தப்பிச் செல்வதற்கு முன்பு சந்தேக நபரைக் கைது செய்தது.

முக்கிய சந்தேக நபர் போலிசாரால் கண்டுபிடிக்கப்படாமல் ஒளிந்து கொள்ள உதவியதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு பாகிஸ்தானியரும் கைது செய்யப்பட்டார் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset