
செய்திகள் மலேசியா
ஆசியான் வெளிப்புற அழுத்தங்களைத் துணிச்சலோடு எதிர்கொள்ள வேண்டும்: பிரதமர் அன்வார்
அமெரிக்காவின் இறக்குமதி வரி உட்பட வெளிப்புற அழுத்தங்கள், புவிசார் அரசியல் ஆகியவற்றை ஆசியான் தெளிவாகவும் உறுதியுடனும் எதிர்கொள்ள வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
ஆசியான் நாடுகள் ஒற்றுமையாக இணைந்து இந்தச் சவால்களை எதிர்க்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் அன்வார் இன்று நடைபெறும் 58-ஆவது ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின் தனது உரையில் தெரிவித்தார்.
உலகம் முழுவதும் வளர்ச்சியை உருவாக்க பயன்படுத்தப்பட்ட சாதனங்கள் இப்போது அழுத்தம் கொடுக்கும், தனிமைப்படுத்தும் மற்றும் கட்டுப்படுத்தும் ஆயுதங்களாக மாறியுள்ளன.
ஆசியான் நாடுகள் விழிப்புடன் அதனை எதிர்கொள்ள வேண்டும் என்று பிரதமர் அன்வார் வலியுறுத்தினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 9, 2025, 4:34 pm
பாஸ் தலைவர் பதவியில் எனக்கு ஆர்வமில்லை: அஹ்மத் சம்சூரி
July 9, 2025, 3:38 pm