
செய்திகள் மலேசியா
MYFutureJobs உலகளாவில் பெரும் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது: ஸ்டீவன் சிம்
கோலாலம்பூர்:
மலேசியாவின் வேலை வாய்ப்பு அகப்பக்கமான MYFutureJobs உலகளாவில் பெரும் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் இதனை கூறினார்.
இந்த அகப்பக்கம்ம் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளில் இலக்கவியல் வேலை வாய்ப்பு தீர்வுகளுக்கான ஒரு அளவுகோலாக அனைத்துலக அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
மலேசியாவின் வேலை வாய்ப்பு உத்தியில், குறிப்பாக வேலை வாய்ப்புகளை மேம்படுத்துவதிலும் தொழிலாளர் சந்தை இடைவெளிகளைக் குறைப்பதிலும் இந்த தளம் முக்கிய பங்கு வகிக்கிறது.
MYFutureJobs வெறும் ஒரு தளம் மட்டும் அல்ல.
இது திறன் இடைவெளிகளைக் குறைப்பதற்கும், தொழில் இயக்கத்தை செயல்படுத்துவதற்கும், எதிர்காலத்திற்கு ஏற்ற நமது பணியாளர்களை உருவாக்குவதற்கும் ஒரு தேசிய கருவியாகும்.
நேற்று இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் வேலை தேடுபவர்களை மேம்படுத்துதல், இலக்கவியல் தளத்தின் சிறந்த நடைமுறைகள் குறித்த பட்டறையில் உரையாற்றிய போது ஸ்டீவம் சிம் இதனை கூறினார்.
தற்போதைய தொழிலாளர் சந்தை பகுப்பாய்வு, செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் தளத்தின் ஒருங்கிணைப்பு துல்லியத்தை மேம்படுத்தியுள்ளது.
மேலும் வேலை தேடுபவர்கள், முதலாளிகள் இருவருக்கும் அதிகரித்த பதிலளிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று சிம் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 9, 2025, 4:34 pm
பாஸ் தலைவர் பதவியில் எனக்கு ஆர்வமில்லை: அஹ்மத் சம்சூரி
July 9, 2025, 3:38 pm